கடலடியில் பாறை பாறையாக குவிந்து கிடக்கும் தங்கம்  ... விஞ்ஞானிகள் கண்டறிந்த புதிய ஆச்சரியம்!

 

 

பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் தங்கம் இயற்கையாகவே உருவாகும் விசித்திரமான முறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நியூசிலாந்து அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், கடலடிப் பகுதிகள் தங்க உற்பத்தியின் மையமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலப்பரப்பில் தங்கத்தின் இருப்பு குறைந்து வரும் நிலையில், இந்த கண்டுபிடிப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தென் பசிபிக் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஜெர்மனிய குழுவினர், கடலடி எரிமலை செயல்பாடுகளே தங்கம் உருவாவதற்குக் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளனர். பூமியின் உட்பகுதியில் டெக்டோனிக் தகடுகள் நகரும்போது ஏற்படும் அதீத வெப்பம் மற்றும் அழுத்தத்தால் பாறைகள் உருகுகின்றன. இதன் விளைவாக, பாறைகளில் சல்பருடன் பிணைக்கப்பட்டுள்ள தங்கம் பிரிந்து, எரிமலைக் குழம்புடன்  சேர்ந்து மேலேறுகிறது.

ஆய்வாளர்கள் சேகரித்த 66 எரிமலைக் கண்ணாடி மாதிரிகளைப் பரிசோதித்ததில், சாதாரண பாறைகளை விட அவற்றில் மிக அதிக அளவில் தங்கம் இருப்பது தெரியவந்தது. எரிமலைக் குழம்பு கடலடியில் உள்ள குளிர்ந்த நீரைச் சந்திக்கும்போது வேகமாக குளிர்ந்து விடுகிறது. அப்போது அதிலுள்ள தங்கம், தாமிரம் போன்ற கனிமங்கள் நீர்வெளியேற்ற துளைகள் வழியாக வெளியேறி, படிமங்களாகப் படிகின்றன.

இது ஒரு தற்காலிக நிகழ்வு அல்ல, கடலடியில் தொடர்ந்து நடைபெறும் புவியியல் செயல்முறை என்று விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். ஆழ்கடல் பகுதிகளில் நாம் கற்பனை செய்ததை விடப் பெருமளவில் கனிம வளங்கள் புதைந்து கிடப்பதை இந்த ஆய்வு உணர்த்துகிறது. எதிர்காலத்தில் கடல்சார் சுரங்கத் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்படும்போது, இந்தத் தங்கப் படிமங்கள் உலகப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!