ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை, மாலை என இரண்டு முறை உயர்ந்தது. காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் ரூ.160 உயர்ந்து ரூ.13,610-க்கும், ஒரு சவரன் ரூ.1,360 உயர்ந்து ரூ.1,08,880-க்கும் விற்பனையானது. வெள்ளி விலையும் ஒரே நேரத்தில் உயர்ந்து ஒரு கிராம் ரூ.330-க்கும், ஒரு கிலோ ரூ.3,30,000-க்கும் விற்கப்பட்டது.
இந்த நிலையில், வர்த்தகம் முடியும் நேரத்தில் மீண்டும் விலை ஏறியது. தங்கம் ஒரு கிராம் ரூ.290 உயர்ந்து ரூ.13,900-க்கும், ஒரு சவரன் ரூ.2,320 உயர்ந்து ரூ.1,11,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காலையில் ரூ.1,280, மாலையில் ரூ.2,320 என ஒரே நாளில் ரூ.3,600 உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க வந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்துடன் போட்டிபோட்டுக் கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.340-க்கும், ஒரு கிலோ ரூ.3,40,000-க்கும் விற்கப்படுகிறது. ஒரே நாளில் வெள்ளி கிராமுக்கு ரூ.22, கிலோவுக்கு ரூ.22 ஆயிரம் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளி பாதுகாப்பான முதலீடு என்ற நம்பிக்கையால் வாங்குதல் அதிகரிப்பதே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!