undefined

சற்றே சரிந்த தங்கம்... உச்சம் தொட்ட வெள்ளி! 

 

 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தை மாற்றங்கள் மற்றும் ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்தே வந்தது. நேற்று ஒரு சவரன் ரூ.1,20,200-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.520 குறைந்து ரூ.1,19,680 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.14,960-க்கு விற்கப்படுகிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் வீழ்ச்சி மற்றும் உலகளவில் தங்க முதலீடு அதிகரித்ததே இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. சவரன் ரூ.1 லட்சத்தை கடந்த பிறகும் தங்கத்தின் விலை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதற்கிடையே வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.3,87,000-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.387 ஆக உயர்ந்துள்ளதால், விரைவில் ரூ.400-ஐ எட்டும் நிலை உருவாகியுள்ளது. தங்கத்துடன் சேர்ந்து வெள்ளி விலை உயர்வும் நகை வாங்குவோருக்கு கூடுதல் சுமையாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!