தங்கம், வெள்ளி விலை மீண்டும் அதிரடி உயர்வு… !
உலக அளவில் தங்கத்தை அதிகம் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரம், அரசியல் பதற்றம், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு போன்ற காரணங்கள் தங்க விலையை தீர்மானிக்கின்றன. அதோடு முதலீட்டு தேவை அதிகரிப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகிறது. கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
அந்த வகையில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.370 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.15,330-க்கும், ஒரு பவுன் ரூ.1,22,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூ.16,734-க்கும், ஒரு பவுன் ரூ.1,33,872-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டது. ஒரு கிராம் ரூ.13 உயர்ந்து ரூ.400-க்கும், ஒரு கிலோ ரூ.4 லட்சத்துக்கும் விற்பனை ஆகிறது. இதன்மூலம் வெள்ளி விலை இன்று வரலாற்றில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!