undefined

ஒரே நாளில் 2 வது முறையாக சரிந்த  தங்கம்!  

 
 

சென்னையில் இன்று (ஜனவரி 30) தங்கம் விலை பவுனுக்கு கவனிக்கத்தக்க அளவில் குறைந்துள்ளது. காலை விலையில் பவுனுக்கு ரூ.4,800 வீழ்ந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.1,29,600-க்கு விற்பனையாகியது. ஒரு கிராம் தங்கம் ரூ.16,200-க்கு விற்கப்பட்டது. மாலையில் மேலும் ரூ.2,800 வீழ்ந்து, மொத்தம் ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ரூ.1,26,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.950 குறைந்து, ரூ.15,850-க்கு விற்பனையாகியுள்ளது.

வெள்ளி விலையில் கூட சரிவு ஏற்பட்டுள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.10 குறைந்த நிலையில், தற்போது மேலும் ரூ.10 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரே நாளில் வெள்ளி கிராம் ரூ.20 குறைந்து, ரூ.405-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தகர்கள் குறிப்பிட்டதாவது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நடவடிக்கைகள் காரணமாக, தென் கொரியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் டாலருக்கு எதிரான நம்பிக்கையை இழந்துள்ளன. இதனால் மத்திய வங்கிகள் தங்களின் டாலர் ரிசர்வுகளை விற்று தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியுள்ளன. இதன் தாக்கத்தால், இந்தியாவில் இன்று தங்கம் விலை சரிவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!