2வது நாளாக குறைந்த தங்கம், வெள்ளி... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில நாட்களாக கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்தது. சவரனுக்கு ரூ.9,520 அதிகரித்து ரூ.1 லட்சத்து 34,400 என்ற உச்சத்தை தொட்டது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.425-க்கு விற்கப்பட்டது.
ஆனால், இந்த அதிரடி ஏற்றம் நீடிக்கவில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் கிராமுக்கு ரூ.950 சரிந்தது. சவரனுக்கு ரூ.7,600 குறைந்தது. இதனால் ஒரு கிராம் ரூ.15,850-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 26,800-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் கடுமையாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19,200-க்கு விற்கப்படுகிறது. கிராம் ரூ.950 குறைந்து ரூ.14,900 ஆக உள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.350-க்கும், கிலோ ரூ.3.50 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இன்றும் சேர்த்து தங்கம் சவரனுக்கு ரூ.15,200 சரிந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!