undefined

 தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு... நகைப் பிரியர்கள் உற்சாகம்!  

 
 

சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 7,600-ம், ஒரு கிராமுக்கு ரூ. 950-ம் குறைந்துள்ளது. கடந்த வார இறுதியில் சனிக்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ. 14,900-க்கும், ஒரு சவரன் ரூ. 1,19,200-க்கும் விற்பனை செய்யப்பட்டிருந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின்னர் தங்க விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு திங்கட்கிழமை நல்ல செய்தி கிடைத்தது.

திங்கட்கிழமை காலை நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை சரிவால் நுகர்வோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 20-ம், ஒரு கிலோ ரூ. 20,000-ம் குறைந்தது. இன்றைய காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மக்கள் தங்கம், வெள்ளி விலை சரிவால் சந்தையில் சிறிது சுறுசுறுப்பான நிலையை அனுபவிக்கிறார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!