மீண்டும் அதிர்ச்சி… தங்கம் விலை சவரன் ரூ.1.16 லட்சம் கடந்து உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 11) மீண்டும் உயர்ந்துள்ளது. 22 காரட் தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,16,800 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயர்ந்து ரூ.14,600க்கு சென்றுள்ளது. அதேபோல் 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.12,540 ஆகவும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.1,00,320 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரி மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து ஏற்றத்தில் உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.560 குறைந்திருந்தாலும் இன்று மீண்டும் உயர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் இருந்தாலும் மொத்தத்தில் தங்கம் விலை உயர்விலேயே உள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்ட குடும்பங்களுக்கு கவலை அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் ரூ.300க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தை நிலை, டாலர் மதிப்பு மாற்றம் மற்றும் உள்ளூர் தேவை காரணமாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. சந்தை நிலைமை ஸ்திரமாகும் வரை விலையில் ஏற்ற இறக்கம் தொடரலாம் என ஜுவல்லரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!