சென்னையில் தங்கம், வெள்ளி விலை தாறுமாறாக குறைவு!
சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலை வெள்ளிக்கிழமை காலை எதிர்பாராத விதமாக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அசுர வேகத்தில் உயர்ந்து லட்சத்தைத் தாண்டிய தங்க விலை, தற்போது சற்றே சரிவைக் கண்டுள்ளது.
கடந்த வாரத்தில் தங்கம் தொடர்ந்து ஏற்றம் கண்டது. சனிக்கிழமை சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து ரூ.1,15,360-க்கும், திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ரூ.1,17,200-க்கும் விற்பனையானது. தொடர்ந்து செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களிலும் விலை மாற்றம் பதிவாகி, சவரன் ரூ.1,18,320 வரை சென்றது.
இந்நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.1,15,200-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.14,400 ஆக உள்ளது. மேலும், நான்கு நாட்களுக்கு பிறகு வெள்ளி விலையும் சரிந்து, கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.280-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!