undefined

ஜெட் வேகத்தில் தங்கம் உயர்வு… நகைப் பிரியர்கள் அதிர்ச்சி! 

 

தங்கம் விலை குறையும் போது மெதுவாகவும், உயரும்போது வேகமாகவும் செல்கிறது என்ற பேச்சு மீண்டும் உண்மையாகியுள்ளது. கடந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் உயர்ந்த தங்கம், 2026 தொடக்கம் முதல் தினந்தோறும் புதிய உச்சம் தொட்டு வந்தது. மத்திய பட்ஜெட், டாலர் மதிப்பு மாற்றம் போன்ற காரணங்களால் ஜனவரி இறுதியில் சற்றே குறைந்தாலும், இது தற்காலிகம் மட்டுமே என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (பிப்.23) தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹180 உயர்ந்து ₹14,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ₹1,440 உயர்ந்து ₹1,18,880 ஆக உள்ளது. நகைக்கடைகளில் வாங்குபவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கிலோவுக்கு ₹10,000 அதிகரித்து ₹3,00,000-க்கு விற்பனையாகிறது. மேலும் விலை ஏற்றம் நீடிக்கும் என சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!