undefined

தங்கம் மீண்டும் உயர்வு ...  சவரன் ரூ.1,19,120 க்கு விற்பனை!  

 

2026 தொடங்கியதிலிருந்து தங்கம் விலை தொடர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ஜனவரியில் பல முறை உயர்ந்த விலை, பிப்ரவரியில் ஏற்ற இறக்கத்தை சந்தித்தது. தற்போது சவரன் ஒரு லட்சத்தை கடந்துள்ளதால் சாதாரண மக்களுக்கு நகை வாங்குவது கனவாக மாறியுள்ளது.

நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ரூ.14,860 ஆகவும், சவரன் ரூ.1,18,880 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890 ஆகவும், சவரன் ரூ.1,19,120 ஆகவும் உள்ளது. 18 காரட் தங்கமும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.12,730 ஆகவும், சவரன் ரூ.1,01,840 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மட்டும் சரிவு ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.290 ஆகவும், ஒரு கிலோ ரூ.2,90,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்வு தொடர்வதால் சந்தையில் பதற்றம் நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!