undefined

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!

 

நடுத்தர மற்றும் எளிய மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கும் தங்கம், தற்போது எட்டாக்கனியாக மாறி வருகிறது. 2026 தொடக்கம் முதலே புதிய உச்சங்களைத் தொட்டு வரும் தங்கம் விலை, பிப்ரவரியிலும் கடும் ஏற்றத்தைக் காட்டுகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் இந்த விலை, பொதுமக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

நேற்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.14,890 ஆக விற்பனையானது. இதனால் ஒரு சவரன் ரூ.240 அதிகரித்து ரூ.1,19,120 ஆனது. இன்று மீண்டும் கிராமுக்கு ரூ.40 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,930 என விற்கப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் ரூ.320 உயர்ந்து ரூ.1,19,440 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.295 ஆகவும், ஒரு கிலோ ரூ.2,95,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1.20 லட்சத்தை நெருங்கியுள்ளதால், திருமண நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் மற்றும் சிறு சேமிப்பாளர்கள் கவலையில் உள்ளனர். உலக பொருளாதார சூழலும் சந்தை மாற்றங்களும் இந்த தொடர்ச்சியான விலையேற்றத்திற்கு காரணமாக கூறப்படுகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!