தங்கம், வெள்ளி விலை அதிரடி சரிவு ... நகைப் பிரியர்கள் உற்சாகம்!
சர்வதேச சந்தை நிலவரம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மற்றும் போர் பதற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கம், வெள்ளி விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று சென்னையில் தங்கம், வெள்ளி விலையில் கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் கவனமாக நிலவரத்தை கண்காணித்து வருகின்றனர்.
இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.115 குறைந்து ரூ.15,660க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.920 குறைந்து ரூ.1,25,280க்கு விற்பனையாகிறது. அதேபோல் 18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.100 குறைந்து ரூ.13,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 குறைந்து ரூ.315க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 குறைந்து ரூ.3,15,000 வரை விற்பனையாகிறது. தொடர்ந்து விலை மாற்றம் நிலவுவதால் வணிகர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!