தங்கம் விலை சற்றே சரிவு... நகைப் பிரியர்கள் ஆறுதல்!
சென்னை நகரில் தங்கம் விலை இன்று சற்றுக் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,25,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.15,650 ஆக உள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலையில் இது சிறிய தளர்வாகும்.
சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,000 வரை உயர்வு ஏற்பட்டது. ஈரான் மீது அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலின் எதிரொலியாக விலை வேகமாக உயர்ந்தது. போர் பதற்றம் நிலவும் நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான சொத்தாக கருதுவது வழக்கம். அதனால் தங்கத்தின் மீது தேவை அதிகரித்தது.
வாரத்தின் முதல் நாளில் சவரனுக்கு ரூ.920 குறைந்திருந்தது. அதன்பின் இன்று மீண்டும் ரூ.80 குறைந்துள்ளது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.315க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.3.15 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை மாற்றம் குறித்து பொதுமக்கள் கவனமாகக் கண்காணித்து வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!