வெள்ளிக்கிழமையில் இன்ப அதிர்ச்சி... மீண்டும் சரியத் தொடங்கிய தங்கம் விலை…!
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்று குறைந்துவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.15,120க்கும், ஒரு சவரன் ரூ.1,20,960க்கும் விற்பனை ஆனது. அதன் பின்னர் நேற்று கிராமுக்கு ரூ.150 மற்றும் சவரனுக்கு ரூ.1,200 குறைந்து விலை சரிந்துவிட்டது. இதனால் ஒரு கிராம் ரூ.14,970க்கும், ஒரு சவரன் ரூ.1,19,760க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலையில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து சில நாட்களாக ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தால் நகை வாங்குபவர்கள் கவனமாக சந்தையை கண்காணித்து வருகின்றனர்.
வெள்ளி விலையை பொறுத்தவரை இன்று மாற்றம் எதுவும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி விலை ரூ.2 லட்சத்து 90 ஆயிரமாக நிலைத்துள்ளது. சந்தை நிலவரத்தை பொருத்து அடுத்த நாட்களில் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!