மீண்டும் உயர்ந்த தங்கம்... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி! 

 

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகக் கண்ணாமூச்சி காட்டி வந்த நிலையில், இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 12-ஆம் தேதி முதல் குறையத் தொடங்கிய தங்கம், இப்போது மீண்டும் தனது 'விஸ்வரூபத்தை' காட்டத் தொடங்கிவிட்டது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,670-ஆக விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்த நிலையில், இன்றும் விலை ஏறுமுகமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.

 
சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதாரச் சூழல் மற்றும் பங்குச்சந்தை மாற்றங்கள் காரணமாகத் தங்கம் விலை மீண்டும் எகிறியுள்ளது. குறிப்பாக, கடந்த சில நாட்களாகக் காலையில் குறைவதும் மாலையில் அதிகரிப்பதுமாக இருந்த தங்கம், இப்போது தொடர்ந்து ஏறுவரிசையில் செல்வது நுகர்வோரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.தங்கம் விலை உயர்ந்தாலும், வெள்ளி விலை இன்று மாற்றமின்றி நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!