வெள்ளிக்கிழமையில் ஏறிய தங்கம்...சரிந்த வெள்ளி ... நகைப் பிரியர்கள் அதிர்ச்சி!
சர்வதேச சந்தையில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை மாற்றங்களால் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை கண்ணாமூச்சி காட்டி வருகிறது. வாரத்தின் தொடக்கத்தில் அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை, நேற்று மாலையில் ரூ.2,560 சரிந்து ஒரு சவரன் ரூ.1,06,800-க்கு விற்பனையானது. ஆனால், இன்று (மார்ச் 27) காலை நிலவரப்படி தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.13,430-ஆக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை உயர்ந்து நகைப்பிரியர்களுக்குச் சற்று அதிர்ச்சி அளித்தாலும், வெள்ளியின் விலை இன்று அதிரடியாகக் குறைந்து ஆறுதல் அளித்துள்ளது. சென்னையில் ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை ரூ.15,000 வரை குறைந்து, ரூ.2,45,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.245-ஆக உள்ளது. கச்சா எண்ணெய் விலை 15% வரை குறைந்த போதிலும், தங்கம் மீதான முதலீடுகள் அதிகரித்ததே இந்த திடீர் விலை உயர்விற்குக் காரணம் எனப் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேற்காசிய நாடுகளுக்கிடையேயான போர்ச் சூழல் காரணமாக இன்னும் சில நாட்களுக்குத் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் இதேபோன்ற நிலையற்ற தன்மையே நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை விலை குறைந்தபோது நகை வாங்கத் திட்டமிட்டவர்கள், இன்று காலை மீண்டும் விலை உயர்ந்திருப்பதைக் கண்டு ஏமாற்றமடைந்துள்ளனர். இருப்பினும் வெள்ளியின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால் வெள்ளிப் பொருட்கள் வாங்குவோருக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!