undefined

தங்க கேக், தங்க கிரீடத்துடன் தாயின் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை ஊர்வசி! 

 

‘லெஜண்ட்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஊர்வசி ரவுத்தேலா, ஆடம்பரத்திற்கு பெயர்பெற்றவர். சமீபத்தில் தனது பிறந்தநாளை தங்க முலாம் பூசப்பட்ட கேக் வெட்டி கொண்டாடி கவனம் ஈர்த்தார். தற்போது தனது தாயாரின் பிறந்தநாளையும் அதே பாணியில் கொண்டாடி மீண்டும் வைரலாகியுள்ளார்.

உலகின் மிக உயரமான ஹோட்டலில் 24 காரட் தங்க கிரீடம் பதிக்கப்பட்ட கேக் வெட்டி தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை “தூய அன்பு” என்ற வாசகத்துடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த படங்கள் வேகமாக பரவி வருகிறது.

ஆடம்பரத்துடன் சர்ச்சைகளுக்கும் ஊர்வசி அடிக்கடி செய்திகளில் இடம்பிடிப்பவர். தங்க செல்போன் விவகாரம், ஆன்லைன் சூதாட்ட விளம்பரம், கோயில் சர்ச்சை என பல விமர்சனங்களை சந்தித்துள்ளார். இருப்பினும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தனது வினோதமான செயல்களால் தொடர்ந்து வைரலாகி வருகிறார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!