undefined

பள்ளி வேன்,  அரசு பேருந்து மீது மோதி கோரவிபத்து ..  பெரும் பரபரப்பு!

 

 

வெள்ளகோவில் பழைய பேருந்து நிலையம் அருகே பள்ளி வேன் மற்றும் அரசு பஸ் மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோட்டிலிருந்து வந்த தனியார் பள்ளி வேன், வீரக்குமாரசாமி கோவில் அருகே வலதுபுறம் திரும்பிய போது, கோவையிலிருந்து திருச்சியை நோக்கி வந்த அரசு பஸ் திடீரென வேனின் பின்பகுதியில் மோதியது.

இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி மற்றும் வேனின் பின்பகுதி சேதமடைந்தது. ஆனால் நல்வாய்ப்பாக பஸ்சில் இருந்த பயணிகள் மற்றும் பள்ளி வேனில் இருந்த குழந்தைகள் எவரும் காயமடையாமல் உயிர் தப்பினர். சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. காலை, மாலை பள்ளி நேரங்களில் வேகமாக செல்லும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!