undefined

நடுவழியில் நின்று விட்ட அரசுப் பேருந்து  ... தள்ளிச் சென்ற பள்ளி  மாணவர்கள்!  

 

திருவாரூரில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான புத்தகத் திருவிழாவுக்கு அரசுப் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த அரசுப் பேருந்து சாலையில் பழுதாக நின்றதால், மாணவர்கள் பேருந்தை தள்ளிச் சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.திருவாரூர் மாவட்ட 4-வது புத்தகத் திருவிழா பவித்திரமாணிக்கம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 8-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. வரும் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள இவ்விழாவிற்கு, மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் அரசுப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த 9-ம் தேதி புத்தகக் கண்காட்சியை பார்வையிட்டு பள்ளிக்குத் திரும்பிய மாணவர்களை ஏற்றிச் சென்ற அரசுப் பேருந்து, பவித்திரமாணிக்கம் பகுதியில் சிறிது தூரத்தில் பழுதாகி சாலையோரத்தில் நின்றது.இதையடுத்து, மாணவர்கள் பேருந்தை சிறிது தூரம் தள்ளிச் சென்றனர். இருப்பினும், பேருந்து ஸ்டார்ட் ஆகாததால் பின்னர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் பேருந்தை தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன், புத்தகத் திருவிழாவுக்கு அனுப்பப்படும் பேருந்துகளை முழுமையாக ஆய்வு செய்த பின் மட்டுமே இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!