அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதல்... 9 பெண்கள் உட்பட 11 பேர் பலி!
சிவகங்கை மாவட்டம் கும்பங்குடி பாலம் அருகே இன்று மனதை பதறவைக்கும் வகையில் பெரிய விபத்து ஏற்பட்டது. காரைக்குடி நோக்கி பயணித்த அரசுப் பேருந்தும், எதிரே இருந்த மதுரை நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி சிதறி நொறுங்கியதில், இடம் முழுவதும் ஓலமிட்ட அழுகை குரல்கள் மட்டுமே கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த பேரதிர்ச்சியில் 9 பெண்கள், ஒரு டிரைவர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மருத்துவ வட்டாரங்கள் அச்சம் தெரிவித்துள்ளன. உள்ளே சிக்கிய பயணிகளை மீட்க தீவிர பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சமீபத்தில் தென்காசியில் இரண்டு பேருந்துகள் மோதியதால் 7 பேர் உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள், மீண்டும் பெரிய உயிர்பலி எண்ணிக்கையுடன் விபத்து நிகழ்ந்திருப்பது பிரதேச மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மாநிலம் முழுவதும் பேருந்து பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வி எழுந்துள்ள நிலையில், இந்த விபத்து பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!