undefined

இனி அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிய வேண்டும் - அரசாணை வெளியீடு!

 

கர்நாடக மாநில அரசு ஊழியர்கள் இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று கதர் ஆடைகளை அணிந்து பணிக்கு வர வேண்டும் என்று அம்மாநில அரசு புதிய அரசாணையை வெளியிட்டுள்ளது. காதி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உள்நாட்டுத் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ் இதற்கான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையை நேற்று வெளியிட்டார்.

இந்த உத்தரவு மாநில அரசு ஊழியர்கள், அரசு உதவி பெறும் நிறுவனங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பணியாற்றும் சுமார் 5 லட்சம் ஊழியர்களுக்கும் பொருந்தும். இந்தத் திட்டம் வரும் ஏப்ரல் 21ம் தேதி "அரசு ஊழியர்கள் தினத்தில்" அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/hKMygI75o70?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/hKMygI75o70/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

காதி ஆடை அணிவது கட்டாயம் அல்ல, இது ஒரு சுய விருப்பத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவாகும். இருப்பினும், ஊழியர்கள் அனைவரும் இதனைப் பின்பற்றுமாறு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. காதி ஆடைகளை வாங்குவதை ஊக்குவிக்க அரசு சில சிறப்புச் சலுகைகளையும் அறிவித்துள்ளது:

அரசுக்குச் சொந்தமான காதி கிராமத் தொழில் வாரிய விற்பனை நிலையங்களில் ஆடை வாங்கும் ஊழியர்களுக்கு ஏற்கனவே உள்ள தள்ளுபடியுடன் கூடுதலாக 5% தள்ளுபடி வழங்கப்படும். ஆண்கள் காதி சட்டை, பேண்ட் அல்லது ஓவர்கோட் அணிந்து வரலாம். பெண்கள் காதி அல்லது காதி பட்டுப் புடவைகள் மற்றும் சுடிதார்களை அணியலாம்.

மாதத்தின் முதல் சனிக்கிழமை தவிர, சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் அரசு நடத்தும் அனைத்து அதிகாரப்பூர்வ விழாக்களிலும் காதி ஆடை அணிவதை அரசு ஊக்குவிக்கிறது. காதித் தொழில் நலிவடைந்து வருவதால், நெசவாளர்களுக்குத் தொடர்ச்சியான தேவையையும் வருமானத்தையும் உறுதி செய்ய இந்த முயற்சி உதவும்.

காதி என்பது வெறும் ஆடை மட்டுமல்ல, அது சுதந்திரப் போராட்டத்தின் அடையாளம் மற்றும் நாட்டின் பெருமை என்பதை இளைய தலைமுறை ஊழியர்களிடம் கொண்டு செல்ல அரசு விரும்புகிறது. ஆரம்பத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் காதி ஆடை அணியத் திட்டமிடப்பட்டது, ஆனால் ஊழியர்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் கருத்தில் கொண்டு, மாதத்திற்கு ஒரு நாள் (முதல் சனிக்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!