டெல்லி பறந்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி... தமிழக அரசியலில் தொடரும் விவாதங்கள்!
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே, சட்ட மசோதாக்கள் மற்றும் கருத்து மோதல்கள் தொடர்பாக நீண்ட நாட்களாக பனிப்போர் நீடித்து வருகிறது. அவ்வப்போது ஆளுநர் வெளியிடும் கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று திடீரென டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை, ஆளுநர் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ள நிலையில் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. மத்திய அரசுடன் தொடர்புடைய முக்கிய ஆலோசனைகள் இடம்பெறலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. ஆளுநரின் திடீர் டெல்லி பயணம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இன்று பிற்பகல் வரை டெல்லியில் இருப்பார் என்றும், அதன் பின்னர் சென்னைக்கு திரும்புவார் என்றும் ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த பயணம், தமிழக அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது. ஆளுநரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் கவனத்துடன் பார்க்கப்படுகின்றன.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!