4 வது ஆண்டாக சட்டப்பேரவையை புறக்கணித்து ஆளுநர் வெளிநடப்பு !
2026-ம் ஆண்டின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது. காலை 9.20 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவைக்கு வந்தார். சபாநாயகர் எம்.அப்பாவு பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி அவரை வரவேற்றார். பேரவை உறுப்பினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நிகழ்ச்சிகள் ஆரம்பமானது.
பாரம்பரிய முறைப்படி தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதன்பின் ஆளுநர் உரை வாசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். சட்டப்பேரவை மரபின்படி தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்படும் என சபாநாயகர் தெரிவித்தார்.
தேசிய கீதம் இசைக்கப்படாததால் ஆளுநர் உரையை வாசிக்காமல் காலை 9.37 மணிக்கு பேரவையை விட்டு வெளியேறினார். இந்த திடீர் வெளிநடப்பு சட்டப்பேரவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர்–தமிழக அரசு இடையேயான முரண்பாடு மீண்டும் வெளிப்படையாகத் தெரிய வந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!