undefined

சட்டபேரவையில் அரசியலமைப்பு கடமை புறக்கணிக்கப்பட்டது...  ஆளுநர் மாளிகை விளக்கம்! 

 

2026-ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. காலை 9.20 மணியளவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவைக்கு வந்தார். சபாநாயகர் எம்.அப்பாவு பூங்கொத்து மற்றும் புத்தகம் வழங்கி வரவேற்றார். வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதும் அவை நடவடிக்கைகள் தொடங்கின.

தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார். ஆனால், சட்டப்பேரவை மரபுப்படி தமிழ்த்தாய் வாழ்த்தே பாடப்படும் என சபாநாயகர் விளக்கம் அளித்தார். இதனை ஏற்க மறுத்த ஆளுநர், உரையை வாசிக்காமல் காலை 9.37 மணியளவில் பேரவையிலிருந்து வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து ஆளுநர் உரையில் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியது. உரையை வாசிக்காமல் வெளியேறியது அரசியலமைப்பு கடமை மீறல் என திமுக கண்டனம் தெரிவித்தது. அரசு அச்சிட்ட உரை மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெறும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!