undefined

 கிராமி விழாவில் குடியுரிமை விவகாரம்.. பில்லி ஐலீஷ் பேச்சால் வெடித்த  சர்ச்சை!

 
 

 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸில் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி நள்ளிரவு 68-ஆவது கிராமி விருது விழா நடைபெற்றது. இதில் அமெரிக்க பாடகியும் எழுத்தாளருமான பில்லி ஐலீஷுக்கு 2025ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலுக்கான கிராமி விருது வழங்கப்பட்டது. ‘வைல்டு பிளவர்’ பாடலுக்காக வழங்கப்பட்ட இந்த விருது, அவரது 10-ஆவது கிராமி விருதாகும்.

இந்த நிலையில், குடியுரிமை தொடர்பான அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை விமர்சித்து பில்லி ஐலீஷ் விழாவில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதைப் பெற்றுக்கொண்ட போது, யாரும் சட்டத்துக்கு புறம்பானவர்கள் அல்ல என்றும், குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக தனது கருத்தை வெளிப்படுத்தினார். மேலும், தொடர்ந்து பேசவும் போராடவும் வேண்டும் என்றும் அவர் கூறினார்.

பில்லி ஐலீஷின் இந்த கருத்துகளுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருகின்றன. சிலர் அவரது பேச்சை துணிச்சலான குரலாக பாராட்டி வருகின்றனர். மற்றொரு தரப்பு, விருது விழாவை அரசியல் கருத்துகளுக்குப் பயன்படுத்தக் கூடாது என விமர்சித்து வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!