undefined

 பெரும் பரபரப்பு... பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு!

 
தமிழகத்தில் தேனி மாவட்டம் கூடலூர் கே.கே நகரில் வசித்து வருபவர்  பாண்டியராஜன் வழக்கறிஞர். இவரது மனைவி அம்பிகா. 43 வயதாகும் இவர் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து  வருகின்றார்.  இந்நிலையில் தேனி மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்று விட்டு கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று விட்டு வீடு திரும்புவதற்காக கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள பஜார் பகுதியில் உள்ள அரசமரம் பூக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். 

அப்போது அங்கு வந்த சுமார் 55 வயதுடைய நபர் அம்பிகாவை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த சிறிய அரிவாளை வைத்து வெற்ற முயன்றார். அப்போது அம்பிகா தடுக்க முயன்ற போது அவரது இடது கண்ணிற்கு கீழ் குத்தினார். இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே இது குறித்து தகவல் அறிந்த கம்பம் தெற்கு சப் இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அம்பிகாவை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். 

இதன் பிறகு முதியவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கூடலூர் சேர்ந்த குபேந்திரன் என்பதும், குபேந்திரனுக்கும், அம்பிகா குடும்பத்தினருக்கும் வீட்டு பாதை பிரச்சனை இருந்து வந்ததாகவும்  முன் விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அரிவாளால் வெட்டியுள்ளது முதற்கட்ட விசாரணையில் வெளியாகியுள்ளது.  குபேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த விசாரணையில் அம்பிகாவின் கண்ணிற்கு செல்லும் முக்கிய நரம்பு பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவரின் மேல் சிகிச்சைக்காக அம்பிகாவை  தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறியுள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?