undefined

 பெரும் பரபரப்பு... விசிக நிர்வாகி  வெட்டி படுகொலை…  !

 

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில்  ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சரத்குமார்.  இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.  இவர் விசிக கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னனி அமைப்பாளராக இருந்தார்.

இவர் நேற்று அதேபகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மது குடித்துக் கொண்டிருந்த சிலருக்கும் சரத்குமாருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை அரிவாளால் வெட்டினர்.

இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சரத்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இந்த சம்பவத்தினால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனை வாசலில்  குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அரியூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?