undefined

பெரும் சோகம்... கல்யாணத்தில இஷ்டமில்ல... தனக்கு தானே மயக்க மருந்தை செலுத்தி பெண்மருத்துவர் தற்கொலை!

 
 


தர்மபுரி மாவட்டத்தில் கடைவீதி அருகே ஹரிஹரநாத சாமி கோவில் தெரு பகுதியில் வசித்து வருபவர்  பச்சையப்பன். இவருடைய மகள் 27 வயது மோனிகா .  பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பை முடித்த இவர், தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு பணிக்கு சென்றுவிட்டு  நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தனியார் மருத்துவமனையில் அவர் இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. ஊழியர்கள் கதவை தட்டி பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. 


இதனால் சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு டாக்டர் மோனிகா அசைவற்ற நிலையில் கிடந்தார்.  அவரை இன்னொரு மருத்துவர்  பரிசோதித்து  மோனிகா பரிதாபமாக இறந்து இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து மருத்துவமனைக்கு  விரைந்து வந்த அவரது குடும்பத்தினர் டாக்டர் உடலை கண்டு கதறி அழுதனர். இதனால் அங்கு இருந்தவர்கள் அனைவரும் கண்கலங்கினர். பின்னர் போலீசார் பெண் டாக்டர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். மோனிகாவிற்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து வந்தனர். ஆனால் அவருக்கு தற்போது திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்ததாக தெரிகிறது.  இதனால் அவர் கடந்த சில நாட்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.   அதே நேரத்தில் அவரது அறையில் மயக்க மருந்து பாட்டில்களும், ஊசிகளும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து பெண் டாக்டர், தனக்குத்தானே மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.  திருமண விவகாரத்தில் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என உறவினர்கள், நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது