undefined

18 வயதில் துயரம்... மின்சார ரயில் மோதி இளம்பெண் பலி!

 

மாம்பலம் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற இளம்பெண் ரயில் மோதி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் சாத்தம்பாடியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ஜானகி (18). இவர், சென்னையில் தங்கியிருந்து தியாகராய நகரில் உள்ள கடையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வேலைக்கு செல்வதற்காக ஜானகி, மாம்பலம் - கோடம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.

அப்போது தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் மோதி ஜானகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மாம்பலம் ரெயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?