"இலவசங்களால் வளர்ச்சி வராது; சம்பாதிக்கத் திட்டம் கொடுங்கள்!" - திமுக, அதிமுகவை வெளுத்த சீமான்!
2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டிப் பிரதான கட்சிகள் மகளிர் மற்றும் ஆண்களுக்கான பல்வேறு இலவசத் திட்டங்களை அறிவித்து வரும் நிலையில், சீமான் பொருளாதார ரீதியிலான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
"தமிழகம் ஏற்கனவே பெரும் கடன் சுமையில் உள்ளது. இந்தச் சூழலில் மகளிருக்குக் கூடுதலாக 1,000 ரூபாய் வழங்கினால், மாநிலத்தின் ஒட்டுமொத்தக் கடன் 15 லட்சம் கோடி ரூபாயாக உயரும். இது ஒரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும். இலவசமாக 2,000 ரூபாய் தருவதை நிறுத்திவிட்டு, மக்கள் மாதம் 20,000 ரூபாய் சம்பாதிப்பதற்கான திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அவர்கள் தீட்டிக் கொடுக்க வேண்டும். இலவசங்களால் ஒருபோதும் மாநில வளர்ச்சி ஏற்படாது. அரசுப் போக்குவரத்துத் துறை ஏற்கனவே ஒரு லட்சம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், ஆண்களுக்கும் இலவசப் பேருந்து பயணம் போன்ற அறிவிப்புகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகும்” என்றார்.
"அரசுப் பேருந்துகள் தற்போது பாதுகாப்பாகவும் தரமாகவும் உள்ளனவா? அரசுப் பேருந்துகளில் தலைவர்கள் யாராவது பயணம் செய்கிறார்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி குறித்துப் பேசிய அவர், "கூட்டணி அமைத்தால் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடுவோம். கூட்டணிக்கு அழைப்புகள் வருகின்றன, ஆனால் நான் ஏற்கவில்லை. தேமுதிக போன்ற கட்சிகள் கூட்டணி வைத்ததால்தான் தங்களது வாக்குச் சதவீதத்தை இழந்தன. நான் அந்தத் தவற்றைச் செய்ய மாட்டேன்" என உறுதியாகத் தெரிவித்தார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!