undefined

ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.93 லட்சம் கோடியைத் தாண்டி சாதனை!

 

வருடத்தில் ஆரம்பத்திலேயே அசத்தலாக ஜனவரி மாத ஜிஎஸ்டி வசூல் சாதனை படைத்துள்ளது. மத்திய பட்ஜெட் 2026 தாக்கலுக்கு முன்னதாக வெளியான இந்த ஜிஎஸ்டி தரவுகள், நாட்டின் வலுவான பொருளாதார வளர்ச்சியையும், வரி ஏய்ப்பு குறைந்திருப்பதையும் உறுதிப்படுத்துகின்றன. ஜனவரி 2026-ல் வசூலான மொத்த ஜிஎஸ்டி தொகை ₹1,93,384 கோடி. இது கடந்த ஆண்டு ஜனவரி மாத வசூலை விட (₹1,82,094 கோடி) சுமார் 6.2% அதிகம். கடந்த டிசம்பர் 2025-ல் வசூலான ₹1.74 லட்சம் கோடியை விட, இது சுமார் ₹19,000 கோடி அதிகமாகும்.

வசூலான மொத்த தொகையில் மத்திய ஜிஎஸ்டி: ₹38,792 கோடி. மாநில ஜிஎஸ்டி: ₹47,817 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி: ₹1,06,775 கோடி. செஸ் : ₹5,768 கோடி முக்கியமாகப் புகையிலைப் பொருட்கள் மூலம்.

நாட்டின் முக்கிய மாநிலங்களில் ஜிஎஸ்டி வசூல் சீரான வளர்ச்சியைக் கண்டுள்ளது: மகாராஷ்டிரா 15% வளர்ச்சி கண்டு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. ஹரியானா 27% என மிக உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. குஜராத் 13% வளர்ச்சி. தமிழகத்தில் ஜிஎஸ்டி வசூல் சுமார் 5% உயர்ந்துள்ளது.

பயனாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்பட்ட தொகையைக் (Refunds) கழித்த பிறகு, ஜனவரி மாதத்திற்கான நிகர ஜிஎஸ்டி வருவாய் ₹1.71 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7.6% வளர்ச்சியாகும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் கிடைத்த வரி வருவாய் 10.1% உயர்ந்துள்ளது. பண்டிகைக் காலங்களுக்குப் பிறகு மக்கள் மத்தியில் நுகர்வு கலாசாரம் குறையாமல் இருந்ததே உள்நாட்டு வரி வசூல் 4.8% அதிகரிக்கக் காரணமாகும். செப்டம்பர் 2025-ல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகள், நுகர்வை அதிகரித்து வருவாயை ஈடுகட்டியுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த வலுவான வரி வசூல், 2026-27 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!