ப்ளீஸ் விட்டுடுங்க... கொய்யாப்பழம் பறித்த சிறுமியின் கை, கால்களை கட்டி வைத்து கொடூரம் ... முன்னாள் ராணுவ வீரர் வெறிச்செயல்!

 


இமாச்சலப் பிரதேச மாநிலம் ஊனா மாவட்டத்தில், வெறும் கொய்யாப்பழம் பறித்ததற்காகச் சிறுமி ஒருவரைச் சங்கிலியால் கட்டி வைத்துத் தாக்கிய முன்னாள் ராணுவ வீரரின் செயல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்தப் பகுதியில் தங்கி வேலை பார்த்து வரும் புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவரின் மகள், தெரியாமல் அங்குள்ள ஒரு வீட்டில் கொய்யாப்பழம் பறித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டு உரிமையாளரான ஓய்வுபெற்ற ராணுவ வீரர், மனிதாபிமானமின்றி அந்தச் சிறுமியைத் தனது வீட்டுப் படிக்கட்டில் இரும்புச் சங்கிலியால் பிணைத்துக் கட்டிப் போட்டுள்ளார். தப்பிச் செல்ல முடியாமல் தவித்த அந்தச் சிறுமி, வலியால் துடித்து அழுது கெஞ்சிய போதிலும் அந்த நபர் இரக்கமின்றித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ஊனா மாவட்ட போலீசார் விரைந்து வந்து பாதிக்கப்பட்ட சிறுமியை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ராணுவத்தில் பணியாற்றி நாட்டுக்குப் பெருமை சேர்த்த ஒருவரே இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகத் தேசிய மனித உரிமைகள் ஆணையமும் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் அந்த நபர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!