undefined

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.. ஆன்லைன் விண்ணப்பம் கட்டாயம்!

 

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளன. இதையொட்டி, போட்டிகளை முறைப்படுத்துவதற்கும் காளைகள் மற்றும் வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் கால்நடை பராமரிப்புத் துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

ஆன்லைன் விண்ணப்பம்:

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த விரும்புவோர் இனி இணையவழியில் (Online) மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரிடம் முன்கூட்டியே அனுமதி பெறுவது கட்டாயம்.

காப்பீடு அவசியம்:

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கான காப்பீட்டு (Insurance) ஆவணங்களை விண்ணப்பிக்கும் போதே சமர்ப்பிக்க வேண்டும்.

காளைகளுக்கு பாதுகாப்பு: விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின்படி, காளைகளைத் துன்புறுத்தக் கூடாது. காளைகள் வெளியேறும் இடத்தில் 24 மணி நேரமும் கால்நடை மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வாடிவாசல் மற்றும் போட்டிக் களத்திற்குள் மாடுபிடி வீரர்கள் தவிர, பார்வையாளர்களோ அல்லது வெளி நபர்களோ நுழைய அனுமதியில்லை. இதை உறுதி செய்யும் பொறுப்பு காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு பாரம்பரியமாக நடத்தப்படாத புதிய இடங்களில் போட்டிகளை நடத்தக் கோரி வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

அதிகாரப்பூர்வ கண்காணிப்பு:

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு போட்டிகளை மேற்பார்வையிட வருவாய் துறை, காவல்துறை மற்றும் கால்நடைத் துறை அதிகாரிகளைக் கொண்ட அதிகாரப்பூர்வ குழுக்கள் முன்கூட்டியே அமைக்கப்பட வேண்டும். அனைத்து ஏற்பாடுகளையும் ஒரு 'செக் லிஸ்ட்' (Check-list) மூலம் சரிபார்த்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வழக்கம் போல மதுரை மாவட்டத்தின் அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் தற்போதே களைகட்டத் தொடங்கியுள்ளன. அரசின் இந்த புதிய நெறிமுறைகள் போட்டிகளை எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!