ரோடு ஷோக்களுக்கு கட்டுப்பாடு… ஜனவரி 5க்குள் வழிகாட்டு நெறிமுறைகள்!
ரோடு ஷோக்கள் தொடர்பாக தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5க்குள் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை பரிசீலித்து, விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரோடு ஷோக்கள் நடத்தும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தெளிவாக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபனைகள் இருந்தால், அதனை எதிர்த்து வழக்கு தொடரவும் உரிமை உண்டு என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த உத்தரவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!