சூப்பர்... கண்ணாடி மாளிகை, வண்ணத்துப்பூச்சி தோட்டம், பறவைகள் இடம் என பசுமை பூங்காவாக மாறும் கிண்டி ரேஸ் கிளப்!
சென்னையில் அமைந்துள்ள கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தை தமிழ்நாடு அரசு குத்தகைக்கு கொடுத்துள்ளது. இந்த நிலத்துக்கு செலுத்த வேண்டிய 730 கோடி குத்தகை பாக்கி செலுத்தப்படாமல் இருந்து வருகிறது . இதனையடுத்து அந்த வளாகத்திற்கு தமிழ்நாடு அரசு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தது. இதைத்தொடர்ந்து கிண்டி ரேஸ் கிளப் பூங்காவாக மாற்றப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு அதற்கான டெண்டரை கோரியுள்ளது.
அதன்படி கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்திலிருந்து பசுமை பூங்கா அமைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய தமிழ்நாடு அரசு தற்போது டெண்டர் கோரி உள்ளது.
மேலும் இந்த பூங்கா வண்ணமலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம் மற்றும் வண்ணத்துப்பூச்சி தோட்டம் என 25 வகையான வசதிகளுடன் உருவாக போகிறது.2024 செப்டம்பரில் ரூ.4832 கோடி மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது டெண்டர் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!