இந்தியாவில் கின்னஸ் சாதனை... ஒரே நேரத்தில் 4000 பேர் சூரிய நமஸ்காரம் பிரதமர் மோடி பெருமிதம்! 

 

 

இந்தியாவில், நேற்று காலை புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலத்தில், ஒரே நேரத்தில் சுமார் 4,000 பேர் சேர்ந்து சூரிய நமஸ்காரம் செய்து வழிபட்டது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநில முதல்வர் பூபேந்திரபாய் பட்டேல் பங்கேற்றார். குஜராத் மாநிலம், மோதரா சூரியக் கோவிலில் நடைப்பெற்ற இந்த நிகழ்ச்சியில், கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்காரிகர் கலந்து கொண்டு, இந்நிகழ்வை கின்னஸ் சாதனையாக அங்கீகரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய ஸ்வப்னில், நிறையப் பேர் சூரிய நமஸ்காரம் செய்யும் சாதனையைப் பரிசோதிக்க நடுவராக வந்துள்ளேன். இதுவரை இத்தனைப் பேர் மொத்தமாக ஒன்றுக்கூடி இந்த சாதனையை செய்ததில்லை.  51 வெவ்வேறு ஊர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 இடங்களில் சுமார்  4,000 பேர் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம் செய்துள்ளனர் என்றார்.இதற்கு முன்பாக ஏற்கனவே கடந்த வருடம் ஜூன் 21ம் தேதி குஜராத் மாநிலம், யோக தினத்தை முன்னிட்டு, கின்னஸ் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்நிகழ்வை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்திய பிரதமர் மோடி, குஜராத் மாநிலம் இந்த 2024 புது வருடத்தை குறிப்பிடத்தக்க சாதனையுடன் வரவேற்றுள்ளது. 108  இடங்களில் ஒரே நேரத்தில் அதிக மக்கள் சூரிய நமஸ்காரம் செய்து உலக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். 108 என்கிற எண் நமது கலாச்சாரத்தில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் மோதேரா சூரியன் கோவிலில் அனைவரும் ஒன்று கூடி இந்த உலக சாதனை படைத்துள்ளனர். யோகா மற்றும் நமது கலாச்சார பாரம்பரியத்தின் மீதான நமது அர்ப்பணிப்புக்கு இது ஒரு உண்மையான சான்றாகும். சூரிய நமஸ்காரத்தை உங்கள் அன்றாட வழக்கத்தின் ஒரு அங்கமாக ஆக்கிக் கொள்ளுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி மாதத்துக்கு இத்தனை சிறப்புகளா? விரதமுறை, பலன்கள்!!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!