undefined

டாட்டா ஸ்டீல் செஸ்: குகேஷ்–அர்ஜுன் ஆட்டம் டிரா!

 

டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி மாஸ்டர்ஸ், சேலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளாக நடத்தப்படுகிறது. 13 சுற்றுகள் கொண்ட மாஸ்டர்ஸ் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, சக நாட்டவரும் உலக சாம்பியனுமான குகேஷை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் ஆடிய தமிழகத்தை சேர்ந்த குகேஷ், 34-வது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிரா கண்டார். இதேபோல் பிரக்ஞானந்தா – தாய் டான் வான், அரவிந்த் சிதம்பரம் – நோடிர்பெக் அப்துசத்தோரோவ், ஹான்ஸ் மோக் நிமான் – யாஜிஸ் கான் எர்டோமுஸ் ஆகிய ஆட்டங்களும் டிராவானது.

3-வது சுற்று முடிவில் அர்ஜுன் எரிகைசி, ஹான்ஸ் மோக் நிமான் உள்ளிட்ட 5 வீரர்கள் தலா 2 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளனர். தொடரின் அடுத்த சுற்று ஆட்டங்கள் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!