undefined

  அமெரிக்காவில் ஒரே நாளில் 3 இடங்களில் துப்பாக்கி சூடு...  6 பேர் பலி! 

 

அமெரிக்காவின் கிழக்கு மிசிசிப்பி மற்றும் அலபாமா எல்லை அருகே உள்ள வெஸ்ட் பாயிண்ட் பகுதியில், கடந்த 9-ம் தேதி 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடந்தது. இந்த தாக்குதலில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் அந்த பகுதியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக டரிக்கா எம். மூர் (24) என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்களில் குற்றவாளியின் தந்தை, சகோதரன் மற்றும் 7 வயது சிறுமி உட்பட அவரது உறவினர்களும் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் சோகத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!