undefined

 நக்சல்களுடன் துப்பாக்கிச் சண்டை… 2 பேர் சுட்டுக்கொலை!

 
 

பிஜப்பூர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் மாவட்ட ரிசர்வ் காவல் படை உள்ளிட்ட பாதுகாப்புப் படைகள் நக்சல்களுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. இதன்போது வனப்பகுதியில் பதுங்கியிருந்த நக்சல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இந்தச் சண்டையில் 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்களின் உடல்கள் சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளன. மேலும் அவர்களிடம் இருந்து ஏகே–47 ரக துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆனால் உயிரிழந்த நக்சல்கள் குறித்த முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதற்கிடையே பிஜப்பூர் பகுதியில் சாலையின் நடுவே நக்சல்கள் பதுக்கியிருந்த 20 முதல் 30 கிலோ எடையுள்ள 2 ஐ.இ.டி. வெடிகுண்டுகளை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்து செயலிழக்கச் செய்தனர். வரும் மார்ச் மாத இறுதிக்குள் நாட்டில் நக்சல் ஆதிக்கம் முற்றிலும் ஒழிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!