undefined

 வங்காளதேசத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு… மாணவர் தலைவர் தீவிர சிகிச்சை!

 
 

வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு மாணவர் புரட்சியில் முக்கிய பங்கு வகித்த ஷெரீப் உஸ்மான் ஹாதி படுகொலை அதிர்வலைகள் ஓய்வதற்குள், தற்போது மற்றொரு மாணவர் தலைவர் சுடப்பட்டுள்ளார். தேசிய குடிமக்கள் கட்சியின் குல்னா பிரிவு தலைவர் மொதாலேப் ஷிக்தர், தென்மேற்கு குல்னா நகரில் மர்மநபர்களால் துப்பாக்கிச்சூட்டுக்கு ஆளானார். இந்த சம்பவம் நாட்டில் மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் தலையில் பலத்த காயமடைந்த ஷிக்தர், குல்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தலையில் இருந்து அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தாக்குதலை நடத்தியவர்கள் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ச்சியாக மாணவர் தலைவர்கள் தாக்கப்படுவது வங்காளதேசத்தில் பெரும் அச்சத்தையும், அரசியல் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!