ஹஜ் புனித யாத்திரை... 'நுஸுக்' அட்டை கட்டாயம்- புதிய விதிகளை அறிவித்தது சவுதி அரசு!
ஹஜ் புனித யாத்திரையை மிகவும் பாதுகாப்பாகவும், திறமையாகவும் நிர்வகிப்பதற்காக, யாத்ரீகர்கள் அனைவரும் 'நுஸுக்' (Nusuk) அட்டையைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று சவுதி அரேபியாவின் ஹஜ் அமைச்சகம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இந்த அட்டை ஒரு மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
உள்நாட்டு யாத்ரீகர்களுக்கு 'மொபைல் போன்' வாயிலாக டிஜிட்டல் வடிவிலும், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்குச் சவுதி வந்தவுடன் அச்சிடப்பட்ட வடிவிலும் 'நுஸுக்' அட்டை வழங்கப்படும்.
ஹஜ் மற்றும் உம்ரா சீசன் முழுவதும், யாத்ரீகர்கள் இந்த அட்டையை எப்போதும் தங்கள் உடன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிகாரப்பூர்வ 'நுஸுக்' அட்டையை உடன் வைத்திருக்காத யாத்ரீகர்களுக்குச் சவுதி அரேபிய அதிகாரிகள் மூலம் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது ஹஜ் சேவைகள் மறுக்கப்படலாம். இந்த விதிக்கு அனைத்து யாத்ரீகர்களும் கண்டிப்பாகக் கட்டுப்படுவது அவசியம் என்று இந்திய ஹஜ் குழுவும் அறிவுறுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!