இனி ஆர்சி பயணிகளுக்கு பாதிக் கட்டணம்... !
ரயில்களில் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு ஆர்ஏசி அடிப்படையில் முழுப் படுக்கை கிடைக்காமல் பகுதியளவு மட்டும் கிடைத்தால், வசூலித்த கட்டணத்தில் பாதியை திருப்பி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு பரிந்துரைத்துள்ளது. ரயில்வே துறை தொடர்பான அறிக்கையை அந்தக் குழு புதன்கிழமை தாக்கல் செய்துள்ளது. முழுப் படுக்கை வழங்கப்படாத நிலையில் முழுத் தொகை வசூலிப்பது நியாயமற்றது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் ஆர்ஏசி டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இறுதி பட்டியல் வெளியான பிறகும் ஆர்ஏசி நிலையில் இருந்தால், மற்றொரு பயணியுடன் ஒரு படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. ஒரு படுக்கைக்கு இரண்டு பயணிகளிடமும் முழு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆர்ஏசி பயணிகளுக்கு பகுதி கட்டணத்தை திருப்பி வழங்கும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என்று குழு ரயில்வே அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் அகலப் பாதையில் அதிவேக ரயில்களுக்கு மணிக்கு 55 கிலோமீட்டர் என்ற குறைந்தபட்ச வேக அளவுகோலை மறுபரிசீலனை செய்யவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!