படிக்கட்டில் தொங்கல், ரீல்ஸ் சாகசம் ... ரயில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை!
சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில்களில் படிக்கட்டில் தொங்குவது, ரயில் ஓட்டத்தின் போது ரீல்ஸ் வீடியோ எடுப்பது, சாகசம் செய்வது போன்ற ஆபத்தான செயல்கள் அதிகரித்து வரும் நிலையில், தெற்கு ரயில்வே இதுபோன்ற ஆபத்தான நடத்தைகளுக்கு இனிமேல் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தெளிவான எச்சரிக்கை விட்டுள்ளது. இளைஞர்களும் மாணவர்களும் பாதுகாப்பை புறக்கணித்து உயிருக்கு ஆபத்தான ரீல்ஸ் வீடியோக்கள் உருவாக்கி வருவது ரயில்வே அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ஓடும் ரயிலில் படிக்கட்டில் தொங்குவது, சறுக்கி செல்வது போன்ற ஸ்டண்டுகள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது, சாகச வீடியோக்களை மொபைலில் பதிவு செய்வது போன்ற செயல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நபர்களின் உயிரையே ஆபத்தில் ஆழ்த்துவதோடு, அருகில் பயணிக்கும் பயணிகளுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயல்கள் மாணவர்களின் எதிர்காலத்தையும், குடும்பத்தினரின் மனநிலையையும் பாதிக்கும் என்று ரயில்வே வலியுறுத்தியுள்ளது.
பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ரயில் கதவுகளில் தொங்குதல், சாகசம், ரீல்ஸ் பதிவு போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் எவ்வித சலுகையுமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், அவசர உதவிக்காக 139 ரயில்வே உதவி எண் தொடர்பு கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!