“ஹாப்பி பேமிலி டே” கேக் பின்னால் அதிர்ச்சி… தந்தை தற்கொலை, குழந்தை பலி!
சென்னை பெரம்பூர் சங்கரமடம் தெருவில் வசித்து வந்த சகாயசெபஸ்டின் (43) குடும்பத்தில் சோக சம்பவம் நடந்துள்ளது. தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றிய அவர், மனைவி ரெக்சி பியூலா (38), மகள் இவாஞ்சலின் அல்வினா (8), மகன் யுவான் ஆண்டோ (4) ஆகியோருடன் வசித்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்கு பல லட்சம் செலவில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால் குடும்பம் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று இரவு சகாயசெபஸ்டின் வீட்டிற்கு கேக் ஆர்டர் செய்து “ஹாப்பி பேமிலி டே” என எழுத வைத்திருந்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி அனைவருக்கும் கொடுத்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அனைவரும் மயக்கம் அடைந்தனர். இன்று காலை ரெக்சி பியூலா காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு உதவி கேட்டார். போலீசார் விரைந்து சென்ற போது சகாயசெபஸ்டின் உயிரிழந்த நிலையில் இருந்தார். மேலும் சிறுவன் யுவான் ஆண்டோவும் உயிரிழந்தது தெரியவந்தது.
உயிருக்கு போராடிய ரெக்சி பியூலா மற்றும் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுமி தற்போது ஆபத்து கட்டத்தை தாண்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவியின் உடல்நிலை குறித்து ஏற்பட்ட வேதனையால் இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!