மரணத்திலும் மனிதாபிமானம்... 13 ஆண்டுகள் கோமாவில் இருந்து கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கண்கள் தானம்!
கடந்த 13 ஆண்டுகளாகக் கோமா நிலையில் மரணப் போராட்டத்தை எதிர்கொண்ட 31 வயது இளைஞர் ஹரீஷ் ராணா, உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க அனுமதியுடன் கருணைக் கொலை செய்யப்பட்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அவரது உயிர் பிரிந்த நிலையில், சோகத்திலும் ஒரு உன்னதமான செயலை அவரது குடும்பத்தினர் செய்துள்ளனர்.
கடந்த 2013-ல் மாடியிலிருந்து தவறி விழுந்து தலையில் பலத்த காயமடைந்த ஹரீஷ், அன்று முதல் நினைவற்ற நிலையில் இயந்திரங்களின் உதவியுடனேயே சுவாசித்து வந்தார். இனி குணமடைய வாய்ப்பில்லை என்ற நிலையில், அவரை கண்ணியமான முறையில் மரணிக்க அனுமதிக்க வேண்டும் என்ற பெற்றோரின் கோரிக்கையை ஏற்றே நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியது.
தங்கள் மகனைப் பறிகொடுத்த பெரும் துயரத்திலும், அவனது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்காவது பயன்படட்டும் என அவரது கருவிழிகளையும், இதய வால்வுகளையும் தானமாக வழங்கப் பெற்றோர் முன்வந்துள்ளனர். நாட்டிலேயே முதல்முறையாக சட்டப்பூர்வமாக கருணைக் கொலை செய்யப்பட்ட நிலையில், மரணத்திற்குப் பிறகும் இருவருக்குப் பார்வை வழங்கிய ஹரீஷ் ராணாவின் செயல் பலரது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!