ஹர்மன்பிரீத் 'சிக்ஸர்' மழை! குஜராத்தை தும்சம் செய்து மும்பை சாதனை வெற்றி!
நவிமும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரின் 6-வது லீக் ஆட்டத்தில், குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய குஜராத் ஜெயன்ட்ஸ் வீராங்கனைகள் ஆரம்பம் முதலே அதிரடி காட்டினர். ஜார்ஜியா (40 ரன்கள்), பார்தி புல்மாலி (36 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் என்ற கடினமான இலக்கை மும்பைக்கு நிர்ணயித்தது.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களம் புகுந்த மும்பை அணிக்குத் தொடக்கமே சறுக்கலாக அமைந்தது. தொடக்க வீராங்கனைகள் கமலினி (13) மற்றும் ஹேலி மேத்யூஸ் (22) சீக்கிரம் வெளியேறினர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த அமன்ஜோத் கவுர் (40 ரன்கள்) அதிரடி காட்டினார். பின்னர் வந்த நிக்கோலா கேரியுடன் இணைந்து ஹர்மன்பிரீத் கவுர் குஜராத் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார்.
ஆட்டத்தின் போக்கையே மாற்றிய ஹர்மன்பிரீத், தனது 10-வது அரைசதத்தைக் கடந்து மிரட்டினார். அவர் 43 பந்துகளில் 71 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் மும்பை அணி 19.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 193 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. WPL வரலாற்றில் மும்பை அணி விரட்டிப் பிடித்த அதிகபட்ச இலக்கு இதுவேயாகும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!