ஹார்மூஸ் ஜலசந்தியை கடந்து வரும் மேலும் 2 இந்திய கப்பல்கள்... !  

 

ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போர் கடந்த 4 வாரங்களாக நீடித்து வரும் நிலையில், உலகப் பொருளாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது. ஈரானில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்குப் பதிலடியாக உலக நாடுகளின் வர்த்தகப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் அதிரடியாக மூடியுள்ளது. இதனை மீறிச் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளதால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பெட்ரோல், டீசல் விலையும் 20 சதவீதம் வரை உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த இக்கட்டான சூழலிலும், பெட்ரோலியப் பொருட்களுடன் 2 வர்த்தகக் கப்பல்கள் இன்று ஹார்மூஸ் ஜலசந்தியைத் தாண்டி இந்தியாவை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியுள்ளன. இந்தக் கப்பல்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாமல் இருக்க, இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல்கள் அரபிக்கடலில் 100 சதவீதம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. "மேற்காசிய நெருக்கடியை இந்தியா முழு பலத்துடன் எதிர்கொண்டு வருகிறது" எனப் பிரதமர் மோடி ஏற்கனவே உறுதி அளித்துள்ள நிலையில், நமது நாட்டின் எரிபொருள் தேவையைக் கருத்தில் கொண்டு கூடுதல் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வரத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து மத்திய அமைச்சகத்தின் சிறப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சின்ஹா கூறுகையில், "கடந்த 24 மணி நேரத்தில் இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களுக்கோ அல்லது இந்தியப் பணியாளர்களுக்கோ எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை; நிலைமை உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது," எனத் தெரிவித்துள்ளார். ஹவுதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை வீச்சு ஒருபுறம் அச்சுறுத்தினாலும், இந்தியக் கடற்படையின் பாதுகாப்பு வளையத்திற்குள் இந்தக் கப்பல்கள் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பதற்றமான சூழலால், இந்தியத் துறைமுகங்களில் பாதுகாப்பு 2 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!