24 மணி நேரத்தில் மாறிய காட்சி: ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியது ஈரான்!

 

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, நேற்று (ஏப். 08) முதல் இரண்டு வார காலத் தற்காலிகப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. உலக நாடுகளிடையே இது ஒரு சிறிய நிம்மதியை ஏற்படுத்திய நிலையில், ஒப்பந்தம் தொடங்கிய 24 மணி நேரத்திற்குள்ளேயே நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் திடீரென நடத்திய வான்வழித் தாக்குதலைக் கண்டித்து, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள முக்கிய கடல் வழிப்பாதையான ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடி அதிரடி காட்டியுள்ளது.

சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தில் இதயமாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணையில், அனைத்து எண்ணெய் கப்பல் போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. சில மணி நேரங்களுக்கு முன்புதான் போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்ட இந்தப் பாதை, லெபனான் தாக்குதலால் மீண்டும் முடக்கப்பட்டிருப்பது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் இந்தத் திடீர் முடிவால், மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வந்த அமைதிச் சூழல் மறைந்து, மீண்டும் ஒரு போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது.

ஒப்பந்தம் அமலுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே போர் நிறுத்தம் மீறப்பட்டிருப்பது அமெரிக்காவிற்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இஸ்ரேலின் இந்தத் தாக்குதலும், ஈரானின் நீரிணை மூடல் நடவடிக்கையும் நிலைமையை மேலும் சிக்கலாக்கியுள்ளன. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் இருக்கும் நாடுகள், எண்ணெய் போக்குவரத்துத் தடையால் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் ஐநா சபை மற்றும் உலக நாடுகள் மீண்டும் ஒருமுறை தலையிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!