பரபரப்பு... நடிகர் அஜய் வாண்டையார் மோசடி வழக்கில் கைது..!
தமிழகத்தில் பிரபல தொழில் அதிபர் நடிகர் அஜய் வாண்டையார் . இவர் மீது சென்னை நுங்கம்பாக்கத்தில் மே 22ம் தேதி மதுபானக்கூடம் ஒன்றில் நடைபெற்ற தகராறில் , அஜய் வாண்டையார் மதுபோதையில் மற்றொரு தரப்பினரை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் அஜய் வாண்டையார் மீது பட்டினப்பாக்கம், எழும்பூர் காவல் நிலையங்களில் வழக்கு உள்ளது. மேலும் இந்த புகார் தொடர்பாக அஜய் வாண்டையார் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும் நடிகர் அஜய் வாண்டையார் மீது மேலும் ஒரு மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபரிடம் பண மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத் தனியார் நிறுவன உரிமையாளர் பரத்குமாரிடம் இருந்து ரூ 2.11 கோடி வாங்கிக் கொண்டு ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. அரசிடமிருந்து சிறப்பு சலுகைகளை வாங்கி தருவதாக கூறி பரத்குமாரிடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாகவும், பணத்தை திருப்பி கேட்டால் மிரட்டுவதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக அஜய் வாண்டையாரை காவலில் எடுத்து விசாரிக்கவும் காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!